உலக கிண்ணக் கிரிக்கெட்டினை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்
ஐ.தே.க. மனு உள்ளிட்ட மூன்று மேன்முறையீடுகளை நிராகரித்தது நீதிமன்றம்
| at 3/15/2011 03:45:00 PM | 0 comments
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மேன்முறையீட்டு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது.
ஏறாவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியும், குச்சவெளி பிரதேச சபைக்கென லங்கா சமசமாஜக் கட்சியும், கந்தளாய் பிரதேச சபைக்கென சுயேட்சைக் குழு ஒன்றினாலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
| Reactions: |
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுப்பணிகள் ஜூலையில் ஆரம்பம்
| at 3/15/2011 03:31:00 PM | 0 comments
மன்னார் கடற்பரப்பில் எதிர்வரும் ஜூலை மாதம் எண்ணெய் அகழ்வுப்பணி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கரின் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் வடமேற்குக் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வுகளை நடத்துவதற்காகவும் அந்தப் பிராந்தியத்தில் மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்காகவுமென கரின் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு 10 கோடி டொலர்களை முதலிட்டிருந்தது.
| Reactions: |
உலக அணுவாயுதக் கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஜப்பான் பூமியதிர்ச்சி
| at 3/15/2011 03:30:00 PM | 0 comments
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது உலக நாடுகள் அனைத்தினதும் அணு ஆயுதங்களை விட 1000 மடங்கு சக்தியினை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவ்வதிர்ச்சியானது 6.7 டிரில்லியன் தொன்கள் டி.என்.டி வெடிபொருட்களின் சக்திக்கு சமனானதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டி.என்.டி எனப்படுவது Trinitrotoluene என்பதன் சுருக்கமாகும். இது ஒருவகை வெடிக்கக்கூடிய இரசாயன பொருளாகும்.
| Reactions: |
ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்
| at 3/15/2011 03:29:00 PM | 0 comments
ஆயுதங்கள் இறக்குமதி தொடர்பில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன.
உலகளவில் ஆயுதங்கள் விநியோகம் தொடர்பாக 'ஸ்டொக்ஹோம்" சர்வதேச அமைதி ஆய்வு மையம் புதிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆயுத தளவாட இறக்குமதியில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
| Reactions: |
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி படுகொலை: இலங்கை இளைஞர் கைது
| at 3/15/2011 03:26:00 PM | 0 comments
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவரை கடந்த வாரம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து பெட்டிக்குள் அடைத்து வீசியதாக இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 19 வயது இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மார்ச் 11ஆம் திகதியன்று கட்டிட தொழிலாளர்களால் கால்வாய் கரையில் இருந்து சூட்கேஸ் பெட்டியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்திய மாணவி தோஷா தாக்கர் என அவுஸ்திரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.
| Reactions: |
காத்தான்குடி தேர்தல் பிரச்சாரம் நேரடி அஞ்சல்
| at 3/14/2011 04:48:00 PM | 0 comments
வேளிநாட்டில் வாழும் பல நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க உள்ளூராட்சி மன்றர் தேர்தல் பிரச்சார கடைசி தினமான இன்று காத்தான்குடியில் இடம் பெறும் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தை நேரடி அஞ்சல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எமது நேயர்கள் அனைவரும் எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.
நேற்றைய எமது நேரடி அஞ்சல் மாலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நள்ளிரவு 12.05 மணியளவில் முடிவடைந்தது.
| Reactions: |
நகர சபை வேட்பாளரின் இணையத்தளம்
| at 3/10/2011 10:12:00 PM | 0 comments![]() |
| www.jaseem.tk |
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் சில குறிப்பிட்ட இடம்களிலேயே எதிர்வரும் 17.03.2011 அன்று நடைபெறவுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் ஓட்டமாவடி, ஏறாவூர் காத்தான்குடி ஆகிய மூன்று முஸ்லீம் ஊர்களில் மாத்திரமே நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
| Reactions: |
உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய "மகளிர் தினம்'
| at 3/08/2011 04:15:00 PM | 0 comments
இவ்வுலகில் பிறப்பெடுத்த அனைவருமே தமது வாழ்க்கை ஆனந்தமாகவும் பூரணமாகவும் நிறைவாக வேண்டுமெனவே அவாவுறுகின்றனர். அதற்கேற்ப பாடுபட்டு உழைக்கவும் முயல்கின்றனர். தம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக உழைப்பில் ஈடுபடுவதில் ஆண், பெண் என்ற வேற்றுமை இல்லை. இருவருமே ஏதோ ஒரு வகையில் பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் வறிய மக்களின் நிலையோ படு மோசமாகவே உள்ளது. அல்லும் பகலும் அயராது உழைத்தால்தான் வாழ்க்கை வண்டியை ஓட்ட முடியும் என்பதே அவர்களது முடிவாக உள்ளது. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்களும் பெண்களுமாக நீண்ட நேரம் வேலை செய்கின்றனர்.
| Reactions: |
எனக்கு இன்னமும் சுதந்திரமில்லை: ஜனாதிபதி
| at 3/08/2011 04:06:00 PM | 0 comments
30 வருடங்களின் பின்னர் யுத்தம் நிறைவடைந்து நாட்டு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்தாலும் தன்னால் இன்னும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, இன்று சரியான சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு அனுபவித்தாலும் எனக்கு இன்னமும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை.
| Reactions: |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
